சில தினங்களுக்கு முன்னர் மைலாப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காருக்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர், அவரை கண்டித்தபோது, காவலருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
காவலரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்த விசிக பிரமுகர்; வைரல் வீடியோ! - விசிக
சென்னை: விசிக பிரமுகர் ஒருவர் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, காவலரை சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வர காவலர்கள் நேற்றிரவு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது விசிக செயலாளர் அசோகன், அவரது தம்பியும், திமுக பிரதிநிதியுமான ஆசைதம்பி சேர்ந்து காவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளால் காவலர் அர்ச்சிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.