தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அரசுப்பணிக்கு செல்லுபடியாகும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

அரசாணை 242இன் படி 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளங்கலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும் எனத் துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

திறந்தநிலைப் பல்கலைக் கழக
திறந்தநிலைப் பல்கலைக் கழக

By

Published : Aug 3, 2021, 5:41 PM IST

சென்னை: இளங்கலை பட்டப்படிப்பு படிக்காமல் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், அரசுத் துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 31ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தற்போது இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் , 'வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில், அடிப்படை இளங்கலை பட்டம் இல்லாமல், திறந்தநிலைப் பல்கலைக் கழக அமைப்பில் பெறப்பட்ட முதுகலைப் பட்டத்தை, பதவி நியமனம் அல்லது பதவி உயர்வுக்குத் தகுதியானதாக கருத முடியாது என்றே நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

நியமனத்துக்கு செல்லுபடியாகும்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையில், அரசாணை எண் 107இன் படி, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் முறையாகப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்கள், பிற பல்கலைக் கழகங்களில் வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் போலவே செல்லுபடியாகும்.

அரசாணை 242இன் படி, 10,12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளங்கலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:69% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details