சென்னை தலைமை செயலகத்தில் ஹெச்.வசந்தகுமார் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
2019-05-29 11:18:21
சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார் தன்னுடைய நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, செய்தியாளர்களளை சந்தித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஹெச்.வசந்தகுமார் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
எட்டு வருட காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெருவித்துக்கொள்கிறேன்.
அரசியலில் முதன் முதலில் வாய்ப்பு தந்த நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து அரசியலில் சிறப்பாக செயல்படுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
வரக்கூடிய நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக கூறுவதற்கு எனக்கு உரிமை இல்லை. திமுக போட்டியிடுவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். நான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு இல்லை. ஐந்து ஆண்டுகளுக்குத் தேவையான நன்மைகளை இந்த மூன்று ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டேன்.
ராகுல் காந்திதான் எங்களை வழிநடத்திவருகிறார். ராகுல்காந்திதான் எங்களுக்கு சூரியனாக இருக்கிறார். ஆகையால் அவர் தலைவர் பதவில் நீடித்து இருந்து காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.