கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஹெச்.வசந்தகுமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
‘ராஜினாமா செய்துவிட்டு டெல்லி செல்கிறேன்..!’ - வசந்தகுமார் - congress
சென்னை: நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்கு செல்ல இருப்பதாக கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
![‘ராஜினாமா செய்துவிட்டு டெல்லி செல்கிறேன்..!’ - வசந்தகுமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3387524-thumbnail-3x2-vasanth.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், “சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து திமுக சட்டத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளேன். நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நான், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்” என்றார்.
மேலும், நாளை சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு டெல்லி செல்ல இருப்பதாகவும் வசந்த்குமார் தெரிவித்தார்.