இயக்குநர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த வசந்த் கடந்த 1990ஆம் ஆண்டு, முதன் முதலில் இயக்கிய படம் கேளடி கண்மணி. இந்த படத்தில் இளையராஜா இசையில் அனைத்துப் பாடல்களும் சாகா வரம் பெற்றன. குறிப்பாக மண்ணில் இந்த காதல் இன்றி பாடலை யாராலும் மறக்க முடியாது.
30 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவுடன் இணையும் வசந்த்! - Ilaiyaraaja
சென்னை : 30 ஆண்டுகள் கழித்து இயக்குநர் வசந்த் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க உள்ளார்.

இளையராஜாவுடன் இணையும் வசந்த்
ஆனால் அந்த படத்தை தொடர்ந்து வசந்த் ஏராளமான படங்களை இயக்கி விட்டார். ஆனால், அந்த படங்களுக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. இந்நிலையில், வசந்த் இயக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'திரையரங்கு இல்லை என்றால் சினிமா இல்லை' - நடிகர் சிம்பு