சென்னை:வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு நட்சத்திரப்பட்டாளமே நடித்து வரும் 'வாரிசு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்டப்பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக வேலை செய்து கொண்டிருந்தனர்.