தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புறநகரில் அக்டோபர் 24ஆம் தேதி மின்சார ரயில் சேவைகள் ரத்து! கண்டிப்பா படிங்க! அப்புறம் கஷ்டப்படாதிங்க! - மின்சார ரயில்கள் ரத்து

Chennai Electric Trains Cancel : தண்டவாள பரமரிப்பு பணி காரணமாக வரும் அக்டோபர் 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

Train
Train

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 10:16 PM IST

சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், தெற்கு ரயில்வே சார்பிலும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஆவடி, சூளூர்பேட்டை, நெல்லூருக்கு இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், "சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள சூளூர்பேட்டை- தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணி, சூளூர்பேட்டை- நெல்லூர் இடையே காலை 7.55 மணி, 10 மணி, நெல்லூர் - சூளூர்பேட்டை இடையே காலை 10.20, மாலை 4.15 மணி, சூளூர்பேட்டை- சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 12.35, மாலை 6.40 மணி, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 4.25 மணி, 6.40 மணி, சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்றும் (21ஆம் தேதி), அதைத் தொடர்ந்து, 24ஆம் தேதியும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை இடையே காலை 7.30 மணி, 8.35 மணி, 10.15 மணி, சென்னை கடற்கரை - சூளூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணி, சூளூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.20 மணி, 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் 24ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சூளூர்பேட்டை - ஏலாவூர் இடையேயும், சூளூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 10 மணி, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்றும் (அக். 21), 24ஆம் தேதியும் சூளூர்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க :Pakistan Vs Afghanistan : சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்கள்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details