தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரத்குமாருக்கு கரோனா தொற்று! - வரலட்சுமி சரத்குமார்

சென்னை: நடிகர் சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

sarathkumar
sarathkumar

By

Published : Dec 8, 2020, 4:32 PM IST

உலகப்பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது நடிகர் சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு அங்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனை நடிகையும் அவரது மனைவியுமான ராதிகா தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். அதில், இன்று சரத்திற்கு ஹைதராபாத்தில் கரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது.

அவர் நல்ல உடல் நலத்துடனும் சிறப்பான மருத்துவர்களின் சிகிச்சையிலும் இருக்கிறார். இனி வரும் நாள்களில் அவரது உடல்நிலை குறித்து நான் தெரிவிக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சரத்குமார் விரைவில் குணமாகி வர ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details