சென்னை:பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக நேற்று (செப்.25) அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் எனவும், வரப்போகிறது எனவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், வி.சி.க, திமுக உடன்தான் கூட்டணி என்று வன்னி அரசு தனது "X" பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘X’ வலைத்தளப் பதிவில், "திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போன்று பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி வி.சி.க தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ, அப்படித்தான் ஆட்சி அதிகாரத்திலிருந்து கொண்டே களமாடி வருகிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும், சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.