சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் மாலை மாற்றிக் கொள்ளும் புகைப்படம் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் வனிதா விஜய்குமார், பவர் ஸ்டார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இது திருமணம் இல்லை என்றும், படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் என விளக்கமளித்தனர்.
முதல்முறையாக இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'பிக்கப் டிராப்' என பெயரிடப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இருவரும் திருமணக் கோலத்தில் பைக்கில் செல்வது போல் உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகவுள்ளது.
புது தாலியுடன் வனிதா விஜய்குமார்
இந்நிலையில் கழுத்தில் புது தாலியுடன் வனிதா விஜய்குமார் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். அதாவது பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்பதை தெளிவாக அவர் கூறியுள்ளார்.