தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இதனையடுத்து தற்போது மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது.
வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று திறப்பு - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா
தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று (ஆகஸ்ட் 25) திறக்கப்படுகின்றன.
அதன்படி சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றுமுதல் திறக்கப்படுகிறது. ஏற்கெனவே இப்பூங்காவில் இருந்த இரண்டு சிங்கங்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தன. ஏழு சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்தன. இதனால் பூங்காவை கிருமிநாசினி கொண்டு அலுவலர்கள் சுத்தம் செய்தனர்.
மேலும் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், 2 மீட்டர் அளவில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கிண்டி சிறுவர் பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூரில் உள்ள அமிர்தி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன.