சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்கள் இன்று முதல் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும்; தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் முதல்நிலை வரிசைப்படி தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்; பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு முதலுதவிப் பெட்டகங்கள் வழங்க வேண்டும் எனவும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் 6 மணி நேரமாக உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்! - வண்டலூர் பூங்காவில் ஆர்பாட்டம்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6 மணி நேரமாக, ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
vandalur zoo: 4 மணி நேரமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்!
இதனால் பூங்காவில் விலங்குகள் பராமரிக்கும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பயோமெட்ரிக் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து துணை இயக்குநர் காஞ்சனா மற்றும் உதவி இயக்குநர் பரத் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றம் முன்பு போலீசாரிடம் மல்லுக்கட்டிய டிப்டாப் பெண் கைது!
Last Updated : Jan 5, 2023, 4:16 PM IST