தமிழ்நாடு

tamil nadu

காதல் ஜோடிகள் கவனத்திற்கு: வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு அபராதம்

By

Published : Feb 10, 2022, 6:09 PM IST

வண்டலூர் பூங்காவை மூடும் நேரமான மாலை 5 மணியைக் கடந்தும் சில காதல் ஜோடிகள் பூங்காவிலிருந்து வெளியேறாமல் மரங்களின் இடுக்குகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதால், ஊழியர்கள் அவர்களைக் கண்டறியாமல், அப்படியே பூங்காவை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தற்போது 5 மணிக்குள் பூங்காவை விட்டு வெளியேறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்து, பூங்கா முழுவதும் பதாகைகள் வைத்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு  100 ரூபாய் அபராதம்
வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு 100 ரூபாய் அபராதம்

சென்னையைஅடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், காதல் ஜோடிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கரோனா தொற்று காரணமாக உயிரியல் பூங்காவில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றிக் குறைந்த அளவு பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

'உங்க காதல் கைகூடணுமா?' அப்போ பூட்டோட புதுச்சேரிக்கு விசிட் அடிங்க... காதலர்களை கவரும் 'லவ் லாக் மரம்'!

இந்த நிலையில் பூங்காவை மூடும் நேரத்தைக் கடந்து தாமதமாக வெளியேறுபவர்களுக்குப் பூங்கா நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு அபராதம்

உயிரியல் பூங்காவை மூடும் நேரமான மாலை 5 மணியைக் கடந்தும் சில இளைஞர்களும், காதல் ஜோடிகளும் பூங்காவிலிருந்து வெளியேறாமல் மரங்களின் இடுக்குகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் ஊழியர்கள் அவர்களைக் கண்டறியாமல் அப்படியே பூங்காவை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது காதலா, உணர்ச்சியா... அறிவீர்களா? அன்பு காதலர்களே!

இந்தநிலையில், வெகு நேரத்திற்குப் பின்னர், அவர்கள் வெளியில் வந்து பூங்கா கதவுகளைத் திறக்கக்கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு 100 ரூபாய் அபராதம்

இதனால் தற்போது 5 மணிக்குள் பூங்காவை விட்டு வெளியேறாதவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்து, பூங்கா முழுவதும் பதாகைகள் வைத்துள்ளது.

வண்டலூர் பூங்கா 1855இல் தோற்றுவிக்கப்பட்டது. இது 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும். இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை உள்ளன.

இதையும் படிங்க: மூன்றெழுத்து மந்திரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் விளையாட்டுகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details