தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பூங்கா தூதுவர்' நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய வண்டலூர் பூங்கா - வண்டலூர் பூங்கா

சென்னை: வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அளித்து வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என மாணவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

'பூங்கா தூதுவர்' பயிற்சி வழங்கிய வண்டலூர் பூங்கா

By

Published : Apr 13, 2019, 9:19 PM IST

“பூங்கா தூதுவர்” என்ற 3 நாள் கோடைக்கால பயிற்சி இந்த வாரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் முதல் நாள் பயிற்சியில் 50 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உயிரின வகுப்புகளான பாலூட்டிகள், ஊர்வனங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள் ஆகியவை குறித்து விளக்கமும், பயிற்சியும் கொடுக்கப்பட்டது. மேலும், பறவைகள் ஓவியம் வரையும் பயிற்சிப் பட்டறையை ரஞ்சித் டேனியல் நடத்தினார். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பறவைகளின் படங்கள் வரையும் தொழில்முறை நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகளே படம் வரையவும், அவற்றிற்கு வண்ணம் தீட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவில் பங்குபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு “பூங்கா தூதுவர்” சான்றும், இந்த ஆண்டிற்கு 5 முறை பூங்காவைக் கண்டுகளிக்க நுழைவு கட்டணமில்லா சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், இயக்குநர் யோகேஷ் சிங், பூங்கா துணை இயக்குநர் சுதாராமன் பங்கு பெற்று மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details