தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை : கரோனா தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இன்று (நவ.11) மீண்டும் திறக்கப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

By

Published : Nov 11, 2020, 1:23 PM IST

சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருடந்தோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் வண்டலூர் பூங்கா மூடப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (நவ.11) மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்விற்குப் பிறகு வழிக்காட்டு நெறிமுறைகளுடன் பூங்கா தற்போது திறக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருகை தரும் பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

பூங்காவிற்கான அனுமதி சீட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை” எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு கட்டணம் 75 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், சிறியவர்களுக்கான கட்டணம் 35ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஏழாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: பேருந்து கட்டணம் உயர்வு

ABOUT THE AUTHOR

...view details