தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Exclusive ’காவி’ நிறத்திற்கு புதிய விளக்கம் அளிக்கும் வானதி சீனிவாசன்!

சென்னை: தன் மீது சிலர் காவி சாயம் பூச நினைப்பதாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில், காவி நிறம் பாஜகவுடையது அல்ல என்ற புதிய விளக்கத்தை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

vanathi srinivasan speaks about rajinikanth in an exclusive to etv bharat tamil

By

Published : Nov 8, 2019, 5:26 PM IST

இதுகுறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது நடக்கும் அரசியல் பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளைக் கூறுகிறார். அந்தக் கருத்துகள் சில சமயங்களில் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதைப்போல் தோற்றமளிப்பதால், அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்து உருவாக்கம் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது.

அவரை பாஜகவுடன் இணைத்து பேசினால் அரசியல் களத்தில் அவரின் தனித்துவத்தை இழக்கச் செய்ய முடியும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே மேற்கூறிய கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்” என்றார்.

வானதி சீனிவாசனின் பிரத்யேக பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், காவி நிறம் குறித்து கூறுகையில், “காவி என்பது மத்திய அரசின் நிறமோ அல்லது பாஜகவின் நிறமோ அல்ல. இந்த நாட்டின் தியாகத்தை குறிப்பதுதான் காவி நிறம். அதனை தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் நிறமாகவும், அரசியல் தலைவர்களின் நிறமாகவும் பார்த்தால், அவர்களின் பார்வையில்தான் கோளாறு உள்ளது” என்ற புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?

ABOUT THE AUTHOR

...view details