சென்னை தி.நகர் கமலாலயத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், 'பாஜகவிற்கு மாநிலத்தலைவர் இல்லையென்றாலும், தேசிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநில தலைவர் இல்லை என்பதால், எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று திமுக மேலும் சிக்கல் ஆக்காமல் இருக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தல் முடிந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முழுமையான நிதியைப் பெறமுடியும்.