தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஞானதேசிகனுக்காக உதவிகோரி வானதி சீனிவாசன் ட்வீட் - வானதி சீனிவாசன் ட்வீட்

சென்னை: தமிழ் மாநில காங்கிரசின் மூத்தத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகனுக்கு ரத்தம் வேண்டி, பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.

ஞானதேசிகன் வானதி சீனிவாசன்
ஞானதேசிகன் வானதி சீனிவாசன்

By

Published : Nov 16, 2020, 8:13 PM IST

தமிழ் மாநில காங்கிரசின் மூத்தத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், முன்னதாக நெஞ்சு வலி காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு ரத்த தானம் செய்யக்கோரி, பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ஞானதேசிகன் அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏபி நெகட்டிவ் ரத்த வகை உள்ளவர்கள் அவருக்கு ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுகிறேன். அவசரம்” எனப் பதிவிட்டு கைப்பேசி எண்ணையும் இணைத்துள்ளார்.

ஞானதேசிகனுக்காக உதவிகோரி வானதி சீனிவாசன் ட்வீட்

வானதி சீனிவாசன், மூத்த வழக்கறிஞரான ஞானதேசிகனிடம் தனது இளமைக் காலத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் என்பதும், வானதிக்கும் அவரது கணவர் சீனிவாசனுக்கும் ஞானதேசிகன் முன்னிலையில்தான் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :புற்று நோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிகரம் நீட்டிய சூரி

ABOUT THE AUTHOR

...view details