சென்னை காமராஜர் சாலையில் பூக்கடையை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்புறம் வந்த ராணுவ வாகனம் மோதியதால், நிலை தடுமாறி அருகே உள்ள தடுப்பு சுவரின் மீது ஆட்டோ மோதியது.
ஆட்டோ மீது மோதிய ராணுவ வாகனம் - auto
சென்னை : காமராஜர் சாலையில் ஆட்டோ மீது ராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ மீது மோதிய ராணுவ வாகனம் !
இதில் ஆட்டோவின் முன்பக்கம் சிதைந்து ஆட்டோ ஓட்டுநரின் கால் உள்ளே சிக்கி கொண்டது. அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆட்டோவில் சிக்கியிருந்த ஓட்டுனரின் காலை போராடி மீட்டெடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுபற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.