சென்னை:சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் முருகேஷ் பேசுகையில் "வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம்.
பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன்.இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன். படத்தில் நடித்துள்ளவர்கள் டேட் இப்போது பிஸியாக உள்ளதால் அவர்களால் வர முடியவில்லை. நிச்சயம் அடுத்தடுத்த புரமோஷன்களில் கலந்து கொள்வார்கள்".