தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியினை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியினை கரோனா வைரஸின் தீவிரப் பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மத்திய அரசின் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நீட் நுழைவுத் தேர்வு போன்றவை ஜூலை மாதம் நடக்க உள்ளது.