ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து பல நாள்களாகியும் வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடவில்லை.
இதனால், நடிகர் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரிடமும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறிந்த படக்குழுவினர், ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று (ஜூலை 11) மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்.
இதனைக் கண்ட அஜித் ரசிகர்கள் உற்சாகத்தோடு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும், ‘ரேஸ் கியருடன் இருசக்கர வாகனத்தில் அஜித்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி’ என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.