தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலர் தினத்தன்று களைகட்டிய மெரினா - heavy crowd in marina

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் காதல் ஜோடிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

marina
marina

By

Published : Feb 15, 2021, 6:57 AM IST

உலகம் முழுவதும் நேற்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாப்பூக்களை கொடுத்தும், பரிசுகள் வழங்கியும், அன்பை பொழிந்தும் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். சுற்றுலாதலங்கள் மற்றும் பூங்காக்கள், தியேட்டர்கள் என பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள்.

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை, மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் காதல் ஜோடிகள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. இந்த முறை காதலர் தினம் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகள் அதிக அளவில் கூடினர்.

மெரினா கடற்கரை

அதேபோல் விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு பொழுதை கழிக்க குடும்பத்துடன் பொதுமக்கள் குவிந்ததால் வழக்கத்தை விட மெரினாவில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details