கரோனா ஊரடங்கின் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாக குற்றம் சாட்டி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் வைக்கப்பட்டிருந்த இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் லாக்-அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்திற்கு எதிராக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் #JusticeForJeyarajAndFenix எனும் ஹாஷ்டேக்கில் பலரும் தங்களது கண்டனங்கள் பதிவு செய்து வரும் நிலையில், பிரபல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து இது குறித்து தற்போது ட்வீட் செய்துள்ளார்.
”குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில், சாத்தான்குளத்தில் குற்றமற்றவர்கள். மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடியல்லவா? அறத்தின் வினாவுக்கு நீதி விடை சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டு அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க :'சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை' - உதயநிதி காட்டம்