தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் முதல் பாடலுக்கு தங்கம் பூசியவர் கண்ணன் - வைரமுத்து - கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வைரமுத்து

சென்னை: மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணனுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து
முத்து

By

Published : Jun 13, 2020, 7:10 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். இவர், சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூன்-13) உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்தின் இரங்கல்
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும் கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன். என் முதல் பாடலான பொன் மாலைப் பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.

தேசியவிருது பெற்ற என் ஏழு பாடல்களில் இரண்டு பாடல்களில் ஒளிபதிவாளராக பணிபுரிந்தவர். குணவான் ஆகிய கனவான். அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முப்பது ஆண்டுகள் சிறைவாசம் என்பது மனித உரிமை மீறல் - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details