சென்னையில் தொடர்ந்து குறைந்து வந்த கரோனா தற்போது ஐஐடியில் 183ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் கரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை ஐஐடி மாறியுள்ளது. வழக்கமான பரிசோதனைக்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்து கல்வி நிலையங்களை திறக்கவேண்டாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா கடந்து போகும்வரை கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம் - வைரமுத்து
சென்னை: கரோனா கடந்து போகும்வரை கல்வி நிலையங்களை திறக்கவேண்டாம் என வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
Vairamuthu
அதில், "கல்வி நிலையங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது. இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக" என பதிவிட்டுள்ளார்.