தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம்..!’ - வைரமுத்து - கவிஞர் வைரமுத்து

இந்தித் திணிப்பை எதிர்த்து அக்.26இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாடலாசிரியர் வைரமுத்து பங்குபெறவுள்ளார்.

’தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம்..!’ - வைரமுத்து
’தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம்..!’ - வைரமுத்து

By

Published : Oct 25, 2022, 12:11 PM IST

Updated : Oct 27, 2022, 6:23 PM IST

சென்னை:தமிழ்க் கூட்டமைப்பு நாளை(அக்.26) இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பங்குபெறவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்காக அழைப்பு விடுத்து ட்விட்டரில் வைரமுத்து பதிவிட்ட புகைப்படத்தில், “தமிழ் எங்கள் மானம்..., இந்தித் திணிப்பு அவமானம்..., வள்ளுவர் கோட்டம் ஆகட்டும்.

வல்லவர் கோட்டம் ஆகட்டும், தமிழ் எங்கள் அதிகாரம். இந்தித் திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம் எட்டுத் திசையும் எட்டட்டும். வான் முட்டும் ஓசை தேன்சொட்டும் தமிழுக்குக் காப்பு கவசம் கட்டட்டும். துடித்துக் கிடக்கும் தமிழர்களே வெடித்து கிளம்புங்கள்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு பதிலீடு செய்வது என்று திட்டமிட்டு ஒன்றிய அரசு செயல்படுவதாக திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். இதேபோல் இந்தித் திணிப்பிற்கு எதிராக தமிழ் ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தித் திணிப்பைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாடலாசிரியர் வைரமுத்து பங்குகொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..? அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு..!

Last Updated : Oct 27, 2022, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details