முதுபெரும் அரசியல் தலைவரும், திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மரணத்தை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், அதை வெல்ல முடியும், பேராசிரியர் மரணத்தை வென்றுவிட்டார். திராவிட இயக்க பெருந்தலைவர்களில் பேராசிரியரைப் போல நிறை வாழ்வு வாழ்ந்த மனிதன் யாருமில்லை.
பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து. ஒரே கட்சியில் இருந்தவர் என்று சொல்லுவார்கள். அவர் உருவாக்கிய கட்சி அவரால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம். அதை விட்டு அவர் எங்கே நகர்வார் என்று பேராசிரியருக்கு கலைஞர் பெருமை சேர்த்தார். எலும்பும், நரம்பும் சதையும் கொண்ட உடல் மறைந்துவிடும், அழுகிவிடும், எரிக்கப்பட்டுவிடும் அல்லது புதைக்கப்பட்டுவிடும்.
ஆனால், கொள்கை, எண்ணம், லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் அழிவதில்லை, பேராசிரியர் அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப்பார்” என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
இதையும் படிங்க: கீழ்ப்பாக்கத்தில் இன்று மாலை அன்பழகன் உடல் தகனம்