ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சங்ககால தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேற்கோள்காட்டி பேசினார். இது அனைவரின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
‘தமிழை உயர்த்துங்கள்’ - மோடிக்கு வைரமுத்து கோரிக்கை! - vairamuthu tweet
சென்னை: ‘தாயகத்திலும் தமிழை உயர்த்துங்கள், நன்றி உரைப்போம்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
Vairamuthu
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐநா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழை உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவிலும் தமிழை உயர்த்தினால் தமிழர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - ஐநாவில் தமிழில் கர்ஜித்த மோடி!