தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகழ் சேர்த்த இடத்தில் கருணாநிதியின் பொன்னோவியம் - நெகிழும் வைரமுத்து - Portrait Of Dr M Karunanidhi opens in tn assembly

எந்த இடம் இனத்திற்கும், மொழிக்கும் புகழ் சேர்த்த இடமோ அந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்படுவதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Vairamuthu
கவிப்பேரரசு வைரமுத்து

By

Published : Aug 2, 2021, 12:05 PM IST

1969ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 2) மாலை திறக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக முன்னதாகவே அறிவித்தார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் விழாவில், கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கவுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதியை வணங்கும் வைரமுத்து

அதில்,”முத்தமிழறிஞரே! எந்த இடம் உங்கள் பொதுவாழ்வில் புகழ் பூத்த இடமோ எந்த இடம் இனத்திற்கும் மொழிக்கும் புகழ் சேர்த்த இடமோ அந்த இடத்தில் உங்கள் புன்னகை பொழியும் பொன்னோவியம் உங்கள் திருவுருவம் திறந்துவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் திறக்கச் செய்யும் முதலமைச்சருக்கும் நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேரவையில் கருணாநிதியின் உருவப்படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைப்பு

ABOUT THE AUTHOR

...view details