திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கிய பாடத்திட்டதில் அருந்ததிராய் எழுதிய Walking With Comrades பாடப்புத்தகம் இடம் பெற்றிருந்தது. இதனை நீக்க கோரி பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி வலியுறுத்தியது.
அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை - வைரமுத்து கண்டனம்
சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து அந்த புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தங்களது சமூகவலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை" என பதிவிட்டுள்ளார்.