தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலேயே, ஒரு மொழி உயர்ந்து விடாது' - கவிஞர் வைரமுத்து! - தமிழுக்கு பெரிய மரியாதை இல்லை

சென்னை : தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்கு பெரிய மரியாதை இல்லை என்று கூறியுள்ளார்.

Vairamuthu book release

By

Published : Oct 14, 2019, 12:16 PM IST

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நூலினை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் வெளியிட பாடகி சுசீலா பெற்றுக்கொண்டார்.

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை

விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, 'உலக மொழியில் தமிழ் 18ஆவது இடத்தில் இருப்பதனாலேயே தாழ்ந்து விடாது. அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு மொழி உயர்ந்து விடாது.

மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்க்க வேண்டும். தமிழும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தமிழ் தவிர்க்கப்படக் கூடாது.

தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழாவில் குடும்பத்தினருடன் கவிஞர் வைரமுத்து

சமஸ்கிருதத்துக்கும், ஹிந்திக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்குப் பெரிய மரியாதை இல்லை. தமிழ்ப் பேச தெரியாதவர்களை, தமிழ் பேச வைக்க நாம் தமிழில் பெயர் வைக்கவேண்டும். பூமியை விட்டு வேறு கிரகத்திற்குச் சென்றாலும், அது முதலில் தமிழினமாக இருக்க வேண்டும்' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதையும் படிங்க:

'வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைத் தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details