தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோல்வி பயத்தால்தான் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்- வைகோ - mdmk

சென்னை: தோல்வி பயத்தால் தான் அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

By

Published : May 1, 2019, 5:16 PM IST

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, தோல்வி பயத்தால் தான் அதிமுக எம்எல்ஏக்களை அக்கட்சியினர் தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக செயல்படும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது.

பொன்பரப்பி தாக்குதலை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நடத்திய போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சமுதாயத்தின் பெயரையோ, கட்சியின் பெயரையோ குறிப்பிடாமல் தான் பேசினார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் தவறான தகவலை அறிந்து கொண்டு வன்முறையை கையில் எடுத்துள்ளார். இதனால் முத்தரசனுக்கு தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் வருகின்றன. இதை தடுக்கும் பொறுப்பு ராமதாஸூக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details