தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இப்படியே போனால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது ' - வைகோ சூளுரை! - vaiko speech on Gandhi 1 percentage book release

சென்னை: மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே போனால் பாஜக நினைக்கிற பழைய இந்தியா இருக்காது என்றும் குறிப்பாக பாஜக நினைக்கிற இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

காந்தி 1% புத்தக வெளியீடு  காந்தி 1% புத்தக வெளியீடு வைகோ உரை  தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது வைகோ பேச்சு  gandhi 1 percentage book release  vaiko speech in gandhi book release  vaiko speech on Gandhi 1 percentage book release  காந்தி புத்தக வெளியீடு வைகோ பேச்சு
இப்படியே போனால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது- வைகோ சூளுரை

By

Published : Dec 19, 2019, 1:02 PM IST

Updated : Dec 19, 2019, 1:09 PM IST

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காந்தி 1% என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.

பின்னர் நிகிழ்வில் பேசிய வைகோ, "காவி வண்ணம் வெள்ளை வண்ணமும் பச்சை வண்ணமும் கொண்டிருக்கக்கூடிய கொடி காங்கிரஸ் கட்சியின் கொடி. அந்த கொடியின் நடுவில் நீல வண்ணத்தில் சக்கரத்தைப் பதித்து மூவர்ண கொடியை உருவாக்கிய போது, காந்தி அதை எதிர்க்கிறார்.

இந்தச் சக்கரம் அசோக மன்னரின் படையில் இருந்த போர் வீரர்கள் மார்புக் கவசத்தில் பொறிக்கப்பட்டிருந்த சக்கரம். இந்திய நாட்டினுடைய கொடியில் ஒரு போர் வெறியோடு செல்கிற ஒரு போர் வீரனின் போர்க்கருவிகளில் பதிக்கப்பட்டிருக்கிற சின்னம் இருக்கக் கூடாது என்று எதிர்த்தார்.

அது மட்டுமல்ல தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதியாக உட்கார்ந்து இருந்தாலே போதும் என்கிறார். இதை எல்லாம் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.

இப்படியே போனால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது - வைகோ சூளுரை

இன்றைக்கு காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். எல்லா இடங்களிலும் மத்திய அரசு வினையை விதைத்து விட்டார்கள். அதை தடுப்பதற்கு அகிம்சை வழியில் இன்னொரு காந்தி வரப்போவது கிடையாது. மாறாக பகத்சிங் போல் இளைஞர்கள் வருவார்கள்.

பாபர் மசூதி விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்பு. காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை அளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. தற்போது குடியுரிமைச் சட்டத்தில் அவர்கள் நினைத்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது. அடுத்ததாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரத்துடிப்பது. இவையெல்லாம், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து கொள்கைகளும் ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டு வருகிறது.

இதுபோல, இவர்கள் செய்து கொண்டே போனால், என்ன செய்வது என்ற கவலை வேண்டாம். ஒவ்வொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும். இவர்கள், இது போன்று தொடர்ச்சியாக மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டால், அவர்கள் நினைக்கின்ற பழைய இந்தியா இருக்காது. குறிப்பாக தமிழ்நாடு அந்த இந்தியாவில் இருக்காது" என்றார்.

இதையும் படிங்க: அமித்ஷாவின் சர்வாதிகார பேச்சுக்கு வரலாறு பாடம் கற்றுக்கொடுக்கும்: வைகோ!

Last Updated : Dec 19, 2019, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details