சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு கோடியே ஐந்து லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார் மோடி. எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது.