தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வரப்போகும் தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தம்' - வைகோ கொதிப்பு

சென்னை: "மாநில கட்சிகளின் முக்கியத்துவம் இந்தியாவில் முதல் முதலாக மலர்ந்திருக்கிறது. எனவே வரப்போகும் தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தம்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko

By

Published : Feb 3, 2019, 9:37 PM IST

மதிமுக சார்பில் வைகோ தலைமையில் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து அண்ணா நினைவிடம் வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அமைதி பேரணி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பின்னர் அண்ணா நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

அறிஞர் அண்ணா துயில் கொண்டுள்ள இந்த கல்லறைக்கு மதிமுக வீர வணக்கம் செலுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் வந்துள்ளோம். அறிஞர் அண்ணா திராவிடர் நாடு கோரிக்கை கைவிட்டுவிட்டு இருந்தாலும் அதற்கான சூழ்நிலை இருக்கிறது என அவர் முதல்வர் ஆன பின்பு கூறினார். அவர் முதல் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் தன் கன்னி பேச்சில் நான் சராசரி மனிதனின் பிரதிநிதி, நான் திராவிட இனத்தில் இருந்து வருகிறேன் என்பதை கூறிக்கொள்ள பெருமை படுகிறேன் என கூறினார். அது மட்டுமின்றி திராவிட சுயநிலை உரிமை கேட்கிறோம். என் கருத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். ஆனால் கருத்து உரிமை எப்படி ஜனநாயகமாகும்.

இன்றைய நிலை மதசார்பற்ற தன்மையை அடியோடி ஒலித்து கட்டவும், தேசிய இனங்களின் உரிமையை கல்லறைக்கு அனுப்பவும், கூட்டாச்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கவும் செயல்பட்டு வருகிறது மோடி அரசு. அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து உறுதியாக போராட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணியில் நாங்கள் உறுதியாக இருப்போம். ஏனெனில், இந்திய நாட்டின் ஜனநாயகத்தை மாநில சுய ஆட்சி கொள்கையை எதிர்காலத்தில் நிலைநாட்டுவதற்கு தேவை இருக்கிறது.

மாநில கட்சிகளின் முக்கியத்துவம் இந்தியாவில் முதல் முதலாக மலர்ந்திருக்கிறது. எனவே வரப்போகும் தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தமாகும். பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் யுத்தமாக இருக்கும். இந்தியாவின் ஒருமைபாடு நிலைக்குமா அல்லது நிலைக்காத விடைகளும் போர் களமாக அமையும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details