மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடிகர் ரஜினியிடம் இன்று (ஏப்ரல் 2) தொலைபேசியில் பேசினார். அப்போது, "நீங்கள் அடிக்கடி இமயமலை செல்வீர்கள். இன்று அந்த மலை அளவிற்கு இமாலயப் புகழ் பெற்று இருக்கின்றீர்கள்.
தகுதியான ஒருவருக்கு திரைத்துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. அதனால் அந்த விருதுக்கும் உயர்வு கிடைத்து இருக்கின்றது.