தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகோ, திருமா மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து - tamilnadu news

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகோ மற்றும் திருமாவளவன்
வைகோ மற்றும் திருமாவளவன்

By

Published : Oct 1, 2021, 9:01 PM IST

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 2016ஆம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது சென்னை எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி வைகோ, திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ, திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - அக்டோபர் 4ஆம் தேதி வழங்க முடிவு

ABOUT THE AUTHOR

...view details