தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது: ராம் ஜெத்மலானிக்கு வைகோ இரங்கல் - ராம் ஜெத்மலானிக்கு வைகோ இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

vaiko remembarance ram jethmalani

By

Published : Sep 8, 2019, 3:06 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சட்ட மாமேதை, ஜனநாயகக் காவல் அரணாக இருந்த, ஆருயிர் ராம்ஜெத்மலானி மறைந்தார் என்ற செய்தியால் துடிக்கின்றேன். அவருக்கு நிகரான இன்னொரு வழக்கறிஞரை இந்தியாவில் என்னால் அனுமானிக்க முடியாது. அவர் தன் சொந்த மகனைப் போல என்னை நேசித்தார்.

நான் மாநிலங்களவை உறுப்பினராகத் தெரிவுபெற்று அவரைச் சந்தித்தபோது, படுத்த படுக்கையாக இருந்த அவர் என் முகத்தை வருடிக்கொடுத்து வாழ்த்தினார். அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் அவரை மதித்து நேசிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஜனநாயக உரிமைக் காவலர்கள் அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த மாமனிதரின் நினைவுகள், என் இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details