தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மும்பையிலிருந்து 96,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை மருத்துவமனைகளுக்கு வருகை! - கரோனா விவரங்கள்

சென்னை : மும்பையிலிருந்து வந்த 96 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.

Cow Shield Vaccines from Mumbai: Supply to Hospitals!
Cow Shield Vaccines from Mumbai: Supply to Hospitals!

By

Published : May 21, 2021, 5:16 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி, அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் இறக்குமதி செய்து வருகின்றன.

அந்த வகையில், மும்பையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் எட்டு பார்சல்களில் 260 கிலோ எடை கொண்ட 96 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள், இன்று (மே 21) சென்னை கொண்டு வரப்பட்டன.

அவற்றில், குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை அமைந்தகரையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நான்கு பார்சல்களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நான்கு பார்சல்களும் கொண்டு செல்லப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details