சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒன்றிய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பியது.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து, சிறப்பு முகாமில் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.
ஆனால், தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாமங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.