தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் - Vaccination of polling agents

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் இன்றும் நாளையும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

By

Published : Apr 24, 2021, 2:23 PM IST



வரும் மே 2 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து 15 மண்டல அலுவலகங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மற்றும் நாளை தடுப்பூசி போடப்படும். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் ஆனால் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உள்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்களுக்கும் தடுப்பூசி குறித்தான அவசியம் மற்றும் விழிப்புணர்வு கொடுத்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details