தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு! - தடுப்பூசி திட்டம் கே என் நேரு

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு

By

Published : Aug 22, 2021, 12:32 PM IST

Updated : Aug 22, 2021, 1:17 PM IST

சென்னை மாநகராட்சி சார்பாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் வாகனத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஆக.22) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

19 ஆயிரம் முதியவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ”சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் நபர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு

இதில் 90 ஆயிரம் நபர்களுக்கு ஏற்கனவே ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இல்லம் தேடி தடுப்பூசி போடும் வாகனங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

15 மண்டலங்களுக்கு 15 வாகனங்கள் மூலம் தடுப்பூசி போட உள்ளது. தேவைப்பட்டால் ரோட்டரி கிளப் மூலம் இன்னும் வாகனங்களை அதிகரித்து தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக 19,150 முதியவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசி அவர், ”சென்னையில் இதுவரை மொத்தமாக 36,25,964 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை 25,43,909 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 10,82,055 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.

அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,69,661 தடுப்பூசிகள், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 17,44,781 தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8,11,820 தடுப்பூசிகளும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு 9,981 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

’கே.பி.பார்க் கட்டடத்துக்கு ஊசி போடப்படவில்லை’

தொடர்ந்து, கே.பி.பார்க் குடியிருப்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்ததால்தான் கட்டடம் பலவீனமானதாக கட்டுமான நிறுவனம் கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, கட்டடத்திலா தடுப்பூசி போடப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதுகலை பட்டப்படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

Last Updated : Aug 22, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details