சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து திரை துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய திரைத்துறையினர், கரோனா தொற்று காரணமாக திரைத்துறை மோசமான நிலையைச் சந்தித்து வருவதாகவும், துறை ஐசியூவில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு திரைத்துறைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
’அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’- உதயநிதி ஸ்டாலின் - ரோட்டரி சங்கம்
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இதையும் படிங்க:பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!