தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸில் பேராசிரியர்கள் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை - Vaccancy for professors in Madurai AIMS which is under construction

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர்கள் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அறிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்-ல்  பேராசிரியர்கள் பணியிடம்
மதுரை எய்ம்ஸ்-ல் பேராசிரியர்கள் பணியிடம்

By

Published : Feb 4, 2022, 12:16 PM IST

சென்னை:மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற எட்டு பேராசிரியர் பணிக்கு 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் பணியிடம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இட ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸில் பணியாற்ற பேராசிரியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி Anatomy, Biochemistry, Community & Family Medicine, Physiology ஆகிய துறைகளில் வகுப்பெடுக்க எட்டு பேராசிரியர்கள் பணிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதியானவர்கள் வரும் 18ஆம் தேதிக்குள் www.jipmer.edu.in/aiims-madurai இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details