தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்..! - சென்னை

தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வருவாய் துறையில் காலிப்பணியிடங்கள்
தமிழக வருவாய் துறையில் காலிப்பணியிடங்கள்

By

Published : Nov 3, 2022, 11:07 AM IST

காலிப்பணியிடங்கள்:

கோயம்புத்தூர் – 3

கிருஷ்ணகிரி – 27

தர்மபுரி – 22

திருப்பத்தூர்‌ – 31

திருவாரூர்‌ – 91

சென்னை – 12

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம்‌ தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ சம்மந்தப்பட்ட வருவாய்‌ வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலிருந்தும்‌ பெற்று கொள்ளலாம். https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பம் பெற்று 7.11.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details