பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி! - பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்
08:53 May 22
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்.
திமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்துவந்த வி.பி. துரைசாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பதவிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி. நியமிக்கப்பட்டார். அதையடுத்து வி.பி. துரைசாமி இன்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக மூத்தத் தலைவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி பதவி நீக்கம்