சென்னை:"கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை மெட்ராஸ் ஐஐடி(IIT Madras) நடத்த உள்ளது. இது குறித்து ஐஐடி இயக்குனர் காமகோடி ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், "ஜி 20 உறுப்பு நாடுகளின் கல்வி நிறுவனங்களின் இடையே ஆராய்ச்சி,கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜி20 கல்விபணிக்குழுவின் நோக்கம். ஜனவரி 31 ஐ ஐ டி ஆராய்ச்சி பூங்காவில் "கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்கு"என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் ஜி20 முதல் கல்விப்பணி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ ஐ டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. பிப்ரவரி 1 முதல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கல்வி கண்காட்சியைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். ஜி 20 முதல் கல்வி பணிக்குழு கருத்தரங்கில் சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காக டிஜிட்டல் தொழில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.