சென்னை:தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கீதா லட்சுமியை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார். மேலும் இவர் பதவி ஏற்றுக் கொண்டது முதல் மூன்று ஆண்டுகள் துணைவேந்தராக பணியில் இருப்பார். துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதாலட்சுமி 26 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் மிக்கவர்.
முனைவர் பட்ட ஆராய்ச்சியார்கள் 14 பேருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். புதிய வகையிலான மூன்று பயிர்களை கண்டறிவதற்கும், எட்டு புதிய தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்கும் பங்காற்றி உள்ளார்.