தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்! - உதயநிதி ஸ்டாலினுக்கு முதன்மை இருக்கை

புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் முதன்மை வரிசையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!
சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

By

Published : Dec 15, 2022, 10:35 PM IST

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், 35 பேர் கொண்ட அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2 வரிசைகள் கொண்ட அமைச்சரவையில் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 21ஆவது இடமும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 23ஆவது இடமும், இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு 26ஆவது இடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு 30ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் திடீர் ஆய்வு; பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது நடவடிக்கை... பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details